Skip to main content
பிரைட் சில்லி இட்லி
Ingredients for பிரைட் சில்லி இட்லி
- 5 இட்லி
- 2 பெரிய வெங்காயம்
- 1 குடை மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- மிளகு தூள் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 துண்டு இஞ்சி
- 2 பல் பூண்டு
- 2 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
- 2 மேஜைக்கரண்டி கெட்சப்
- கருவேப்பிலை தேவையான அளவு
- கொத்தமல்லி தேவையான அளவு
How to make பிரைட் சில்லி இட்லி:
முதலில் இட்லியை வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இஞ்சி பூண்டுடை பேஸ்ட் செய்து, வெங்காயம், மற்றும் குடை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஒரு வடசட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து இட்லியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.எண்ணெய் சுட்டதும் வட சட்டியின் அளவிற்கு ஏற்ப அதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள இட்லியை போட்டு பொரித்து இட்லி பொன்னிறமானதும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். (இட்லியை டீப் ப்ரை செய்து விடக்கூடாது.)அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து இரண்டு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.எண்ணெய் சுட்டதும் அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்இன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள குடை மிளகாயை சேர்த்து 1 லிருந்து 2 நிமிடம் வரை வதக்கவும்.2 நிமிடத்திற்கு பிறகு இதனுடன் கெட்சப் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும்.பின்பு பொரித்து எடுத்து வைத்திருக்கும் இட்லி துண்டுகளை இதில்போட்டு நன்கு கிளறவும்.இட்லியை இறக்குவதற்கு முன் அரை மேஜைக்கரண்டி அளவு மிளகுதூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃப்ரைட் சில்லி இட்லிதயார்.இதை ஒரு தட்டில் வைத்து அதன் மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Comments
Post a Comment